Home Featured நாடு தமிழ்க் கோட்டம் கட்டிட நிதிக்காக தமிழ்க் கணிமை நிகழ்ச்சி – முத்து நெடுமாறன் சிறப்புரை!

தமிழ்க் கோட்டம் கட்டிட நிதிக்காக தமிழ்க் கணிமை நிகழ்ச்சி – முத்து நெடுமாறன் சிறப்புரை!

1564
0
SHARE
Ad

 

Tamilகோலாலம்பூர் – தமிழ் மொழி, இனம், சமயம் எனும் முப்பெரும் கொள்கையோடு ஒரே இலக்கில் மிகச் சிறப்புடன் செயலாற்றிவரும் தமிழ் வாழ்வியல் இயக்கம் தமிழுக்கென ஒரு மணிமண்டபம் காணவுள்ளது.

மலேசியத் திருநாட்டில் தமிழின் பெயரால் அமையவுள்ள சிறப்புமிக்க இந்த மணிமண்டபத்திற்குத் ‘தமிழ்க் கோட்டம்’ எனப் பெயர் சூட்டப்படுள்ளது. இந்தத் தமிழ்க் கோட்டம் மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடமாகும்.

#TamilSchoolmychoice

மலேசியத் தமிழருக்கும் மலேசியாவில் தமிழுக்கும் ஒரு தனிப்பெரும் அடையாளமாகிய  தமிழ்க் கோட்டம் கட்டிடத்திற்காக நிதி திரட்டும் வகையில் ‘தமிழ்க் கோட்டமும் தமிழ்க்கணிமையும்’ எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி எதிர்வரும் 31-7-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4.00க்குப் பேராக், பாரிட் புந்தார் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரியான் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

MuthuNedumaranமலேசியக் கணினி வல்லுநரும் முரசு அஞ்சல், செல்லினம் ஆகிய தமிழ் மென்பொருள் நிறுவனருமாகிய முத்து நெடுமாறன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்.

முத்துநெடுமாறன் செல்லியல் தகவல் ஊடகத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்.

கணினி தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்மொழி எந்த அளவுக்கு தனது ஆளுமையைப் பதித்துள்ளது, தமிழில் தகவல் தொழில்நுட்பம் அடைந்துள்ள ஆகக் கடைசியான வளர்ச்சிகள், தமிழ்மொழியின் எதிர்கால வெல்விளிகள் (சவால்), புதிய திறன்கருவிகள், தட்டைக் கருவிகளில் தமிழ் மென்பொருளை நிறுவுதல் முதலான கோணங்களில் அவருடைய உரை அமையவுள்ளது. நேரடியான செய்முறை பயிற்சிகளும் வழங்கப்படும்.

எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க தமிழ் அன்பர்கள், தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள், இளையோர்கள் அனைவரும் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக மேல் விவரங்கள் பெறுவதற்குத் தொடர்பு கொள்ளுங்கள்:-

க.முருகையன் (012-4287965)

ம.தமிழ்ச்செல்வன் (013-4392016)

சுப.நற்குணன் (012-4643401)

கோவி.சந்திரன் (013-5034981)

அல்லது தமிழ்க் கோட்டம் இணையத் தளத்திற்குச் சென்று விவரங்கள் பெறலாம்.

தமிழ்க் கோட்டம் இணையத்தள முகவரி http://tamilkottam.blogspot.com