Home உலகம் 1-0 : போர்ச்சுகல் மொரோக்காவை வெற்றி கொண்டது

1-0 : போர்ச்சுகல் மொரோக்காவை வெற்றி கொண்டது

927
0
SHARE
Ad
கோல் அடித்த வெற்றிக் களிப்பில் போர்ச்சுகலின் ரொனால்டோ

மாஸ்கோ – இன்று புதன்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ‘பி’ பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல் மொரோக்கோவை 1-0 கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.

தனது முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் ஸ்பெயின் நாட்டுடன் 3-3 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டது.

தனது முதல் ஆட்டத்தில் ஈரானுடன் 1-0 கோல் எண்ணிக்கையில் தோல்வி கண்ட மொரோக்கோ தொடர்ந்து இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளதால், முதல் சுற்றிலேயே உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இன்றைய ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே பந்தைத் தலையால் முட்டி கோலாக்கினார் போர்ச்சுகல் குழுவின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதனைத் தொடர்ந்து ரொனால்டோ அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கோல்கள் எதுவும் அடிக்க முடியாமல் போர்ச்சுகல் தடுமாறியது.

மொரோக்கோவும் கோல் எதுவும் அடிக்க முடியாத காரணத்தால் இறுதியில் ஆட்டம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் போர்ச்சுகலுக்குச் சாதகமாக முடிந்தது.