Home நாடு 54 எம்பிக்கள் வைத்திருக்கும் நாங்கள் ஏன் கலைக்க வேண்டும்? – ஜோஹாரி கேள்வி!

54 எம்பிக்கள் வைத்திருக்கும் நாங்கள் ஏன் கலைக்க வேண்டும்? – ஜோஹாரி கேள்வி!

1000
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத்தேர்தல் தோல்வியையடுத்து அம்னோவைக் கலைக்க வேண்டுமென பாஸ் உதவித் தலைவர் முகமது அமர் நிக் அப்துல்லா பரிந்துரைத்திருப்பதை அம்னோ உச்ச மன்றத் தலைவர் ஜோஹாரி அப்துல் கானி மறுத்திருக்கிறார்.

18 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் பாஸ் கட்சி, 54 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எங்களை ஏன் கலைக்கச் சொல்கிறது என்றும் ஜோஹாரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், அம்னோ தனது பின்னடைவுகளை சரிசெய்து விரைவில் மீண்டும் எழும் என்றும் ஜோஹாரி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

வரும் ஜூன் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் அம்னோ தேர்தலில், உதவித் தலைவர் பதவிக்கு ஜோஹாரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.