Home நாடு அல்தான்துயா தந்தை காவல்துறையில் புதிய புகார்!

அல்தான்துயா தந்தை காவல்துறையில் புதிய புகார்!

829
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது மகள் அல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கை புதிதாக விசாரணை செய்யுமாறு அவரின் தந்தையான டாக்டர் செடிக் ஷாரிபு இன்று புதன்கிழமை காவல்துறையில் புதிய புகார் ஒன்றை அளித்தார்.

டாங் வாங்கி காவல்நிலையத்தில் இன்று காலை 11.35 மணியளவில் தனது குடும்ப வழக்கறிஞர் ராம் கர்பால் சிங்குடன் சென்ற டாக்டர் செடிக், புதிதாகப் புகார் ஒன்றைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில், டாக்டர் செடிக் புத்ராஜெயாவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.