Home உலகம் உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 3 -போர்ச்சுகல் 3

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 3 -போர்ச்சுகல் 3

838
0
SHARE
Ad
போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ

மாஸ்கோ –(மலேசிய நேரம் அதிகாலை 4.00 மணி) இன்றைய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் 3-3 கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க முற்பட்டபோது, ஸ்பெயின் ஆட்டக்காரர் அவரைத் தடுத்து நிறுத்த ரொனால்டோ தடுமாறி விழுந்த காரணத்தால், போர்ச்சுகலுக்கு பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை ரொனால்டோ அழகாக அடித்து கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து ஸ்பெயினின் டியகோ கோஸ்தா 26-வது நிமிடத்தில் இரண்டு தற்காப்பு விளையாட்டாளர்களை சாமர்த்தியமாக ஏமாற்றி ஸ்பெயினின் முதல் கோலைப் புகுத்தினார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற நிலையில் இருந்து வந்தது.

பின்னர் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் மற்றொரு கோலை அடித்ததைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 2-1 என்ற நிலையில் போர்ச்சுகலுக்கு சாதகமாக முடிவடைந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் ஸ்பெயின் அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு 3-2 என்ற நிலையில் முன்னணியில் இருந்தது.

இருப்பினும் இரண்டாவது பாதி ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் ரொனால்டோவுக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை அவர் அற்புதமாக அடித்து கோலாக்கினார். அதைத் தொடர்ந்து 3-3 என்ற நிலையில் இரண்டு குழுக்களுமே ஆட்டத்தை முடித்துக் கொண்டன.