Home உலகம் உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 1 -போர்ச்சுகல் 2 (முதல் பாதி ஆட்டம்)

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 1 -போர்ச்சுகல் 2 (முதல் பாதி ஆட்டம்)

842
0
SHARE
Ad

மாஸ்கோ – மலேசிய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் தொடங்கியது முதல் பரபரப்பும் விறுவிறுப்புமாக அமைந்தது.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க முற்பட்டபோது, ஸ்பெயின் ஆட்டக்காரர் அவரைத் தடுத்து நிறுத்த ரொனால்டோ தடுமாறி விழுந்த காரணத்தால், போர்ச்சுகலுக்கு பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை ரொனால்டோ அழகாக அடித்து கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து ஸ்பெயினின் டியகோ கோஸ்தா 26-வது நிமிடத்தில் இரண்டு தற்காப்பு விளையாட்டாளர்களை சாமர்த்தியமாக ஏமாற்றி ஸ்பெயினின் முதல் கோலைப் புகுத்தினார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற நிலையில் இருந்து வந்தது.

பின்னர் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் மற்றொரு கோலை அடித்ததைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 2-1 என்ற நிலையில் போர்ச்சுகலுக்கு சாதகமாக முடிவடைந்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம்தான் இந்த ஆண்டுகளுக்கான போட்டிகளில் பரபரப்பும்-விறுவிறுப்பும் கூடிய முதல் ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் வலுவான குழு என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், போர்ச்சுகலை வழிநடத்தப் போகும் ரொனால்டோ மட்டும் சளைத்தவரா என்ன? பல முறை சிறந்த விளையாட்டாளர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் ரொனால்டோ உலகக் கிண்ணப் போட்டிகளிலும் தனது குழுவினரின் முத்திரையைப் பதிக்க பெரிதும் முயற்சி செய்வார்.