மாஸ்கோ – தற்போது இரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் களத்திலும் மலேசியப் பிரதமர் துன் மகாதீரின் ஆதரவாளர்கள் அவரது புகழ்பாட மறக்கவில்லை.
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் நடைபெறும் மாஸ்கோ நகரின் மையத்தில் அங்கு சென்றுள்ள மலேசியக் காற்பந்து இரசிகர்கள், “துன் நீடுழி வாழ்க” என்ற பொருள்படும் பதாகை ஒன்றைத் தயாரித்து – அதனைத் தூக்கிப் பிடித்து – அந்தப் புகைப்படத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்தப் புகைப்படத்தை மகாதீரின் மகள் மரினா மகாதீரும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.