Home உலகம் உலகக் கிண்ணம்: மொரோக்கோ 0- ஈரான் 1

உலகக் கிண்ணம்: மொரோக்கோ 0- ஈரான் 1

935
0
SHARE
Ad
ஈரான்-மொரோக்கோ குழுக்களின் மோதல்

மாஸ்கோ – (மலேசிய நேரம் அதிகாலை 1.00) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் ‘பி’ (B) பிரிவு ஆட்டங்களில் முதல் ஆட்டமாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மொரோக்கோ-ஈரான் நாடுகளுக்கு இடையிலான ஆட்டம் 1-0 என்ற நிலையில் ஈரானுக்கு சாதகமாக முடிந்தது.

90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்து கூடுதலாக 2 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இரு குழுக்களுமே இறுதி வரை கோல்களைப் புகுத்த முடியாமல் தடுமாறின.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் மொரோக்கோ-ஈரான் குழுக்கள்

எனினும், மொரோக்கோவின் விளையாட்டாளர் அசிஸ் பொஹாடவுஸ் பந்தைத் தலையால் முட்டி தனது தரப்பு வலைக்குள்ளேயே புகுத்தியதைத் தொடர்ந்து ஈரான், ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

#TamilSchoolmychoice

ஆகக் கடைசியாக 1998-இல் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெற்ற மொரோக்கோ அதன் பின்னர் வரிசையாக பலமுறை முயற்சிகள் செய்தும் பலனின்றி, 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 2018-இல்தான் இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்குத் தேர்வாகியது.

‘பி’ பிரிவில் மொரோக்கோ, ஈரான், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நான்கு நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதனை அடுத்து ‘பி’ பிரிவில் இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினும், போர்ச்சுகலும் மோதுகின்றன. மலேசிய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.