புத்ரா ஜெயா – ஆகக் கடைசியாக 2013-ஆம் ஆண்டில் பிரதமராக தனது ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பை புத்ரா ஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா என்ற பிரதமர் இல்லத்தில் நடத்திய துன் மகாதீர் 15 வருடங்களுக்குப் பிறகு இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 15) மீண்டும் பிரதமராக தனது ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார்.
மகாதீருக்கு 14-வது பொதுத் தேர்தலில் எவ்வாறு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனரோ அதே போல ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பிலும் ஏறத்தாழ 80 ஆயிரம் பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு தந்து மகாதீரைத் திக்குமுக்காட வைத்தனர்.

சுமார் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கைகுலுக்கி, தன் கரங்களே கழன்று விழுந்துவிட்டதைப் போல உணர்ந்ததாக மகாதீர் கூறியிருக்கிறார்.
திறந்த இல்ல உபசரிப்புகளில் மகாதீரின் இன்றைய உபசரிப்பு ஒரு மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

படங்கள்: நன்றி: மரினா மகாதீர் டுவிட்டர் பக்கம்