Home உலகம் உலகக் கிண்ணம்: 1-0 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி!

உலகக் கிண்ணம்: 1-0 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி!

1048
0
SHARE
Ad

மாஸ்கோ – (மலேசிய நேரம் இரவு 9.55) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் எகிப்து நாட்டைத் தோற்கடித்து தென் அமெரிக்க நாடான உருகுவே தனது வலிமையை நிலை நாட்டியது.

முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரண்டு நாடுகளுமே கோல் எதுவும் போடாமல் சம நிலையில் இருந்தன.

வலிமை வாய்ந்த விளையாட்டுக் குழுவைக் கொண்ட நாடாகக் கருதப்படும் உருகுவே குழுவை முதல் பாதியில் வெற்றிகரமாகத் தற்காத்து விளையாடிய எகிப்து இரண்டாவது பாதியில் ஒரு கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது.

#TamilSchoolmychoice

இதுவரையில் 2 முறை உருகுவே உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருக்கின்றது என்பதே அதன் வலிமை எத்தகையது என்பதை எடுத்துக் காட்டும்.

உருகுவே நாட்டைச் சேர்ந்த ஜெ.எம்.கிமனெஸ் ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் 89-வது நிமிடத்தில் பந்தைத் தலையால் முட்டி கோலாக்கி, எகிப்து நாட்டின் கனவுகளைத் தகர்த்தார். உருகுவே நாட்டுக்கும் முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.