Home நாடு பாரம்பரியங்களைப் பிரதிபலித்த நாட்டியக் கலை விழா!

பாரம்பரியங்களைப் பிரதிபலித்த நாட்டியக் கலை விழா!

1445
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் கதக், பரதம், நாட்டுப்புற நடனங்கள் அடங்கிய ‘நாட்டியக் கலை விழா’ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கமானது இந்திய தூதரகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலாச்சார மையம் மற்றும் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற பரதநாட்டியக் குழு ஶ்ரீபனா கலைக்கூடத்துடன் இணைந்து நாட்டியக் கலை விழா விழாவினை ஜூன் 03, 2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், நாட்டியக் கலைஞர்கள் வெளிப்படுத்திய நவரசங்கள் மற்றும் பாவனைகள் தன்னை மிகவும் பரவசப்படுத்தியதாகவும் தொடர்ந்த வேலைகளுக்கிடையில் இளைப்பாறக் கிடைத்த வாய்ப்பாகவும் இருந்தது என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பொதுத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்தியர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், மலேசிய இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவு தலைவர் டாக்டர் ராஜாமணி, சென்னை பல்லவபுரத்தில் இருந்து வந்திருந்த நாட்டியக் கலைஞர்களின் நடனங்கள் சிலிர்ப்பூட்டும் விதத்தில் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினார்.

லேடர்ஸ் கமர்ஷியல் ஏற்பாட்டில் கேஏஎஸ் குழும நிறுவனங்களோடு சி3 சொல்யூசன்ஸ் இணைந்து வழங்கிய நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும், ஜீன் 2 ம் தேதி ஶ்ரீபனா கலைக்குழுவினரின் நாட்டிய பிரம்மோட்சவத்தை பத்து மலை திருத்தலத்தில் மலேசியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கம் ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விழா சீறும் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த லேடர்ஸ் கமர்ஷியல் செழியனுக்கு, மலேசியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜாகண்ணன் நன்றி தெரிவித்தார்.