Home Featured இந்தியா கர்நாடக முதல்வரின் 39 வயது மகன் காலமானார்!

கர்நாடக முதல்வரின் 39 வயது மகன் காலமானார்!

778
0
SHARE
Ad

rakesh siddaramaiah-karnataka CM - passed awayபெங்களூரு – கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் இல்லத்திலும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது.

சித்தராமையாவின் மகன் ராகேஷ் (படம்) இன்று சனிக்கிழமை, உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு வயது 39.

இவரது உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பெல்ஜியத் தலைநகர் பிரசல்சிசில் உள்ள எண்ட்வெர்ப் பல்கலைக் கழக மருத்துவமனையில் ராகேஷ் கணையம் சம்பந்தப்பட்ட நோய்க்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா அவரது மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோருடன் பெல்ஜியம் சென்றுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.