Home Featured நாடு நஜிப்பை வீழ்த்த வான் அசிசா-மொகிதின் யாசின் இணைகிறார்கள்!

நஜிப்பை வீழ்த்த வான் அசிசா-மொகிதின் யாசின் இணைகிறார்கள்!

1206
0
SHARE
Ad

muhyideen-wan azizah-azmin ali

கோலாலம்பூர் – அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வாசகத்திற்கு பொருத்தமாக ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக செயல்பட்டுக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும், பிகேஆர் கட்சித் தலைவருமான டாக்டர் வான் அசிசாவும், 1எம்டிபி விவகாரத்தில், நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக ஒன்றாக இணைகின்றனர்.

நேற்று சனிக்கிழமை சுபாங் ஜெயாவில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மொகிதின் யாசின் வான் அசிசாவோடு இணைந்து கலந்து கொண்டார். இதன்மூலம், பிகேஆர் கட்சியுடன் மொகிதின் கைகோர்த்து 1எம்டிபி விவகாரத்தில் நஜிப்புக்கு எதிராகப் போராடப் போகின்றார் என்பது உறுதியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

புரியும் வகையில் 1எம்டிபி விவகாரங்கள் குறித்து மக்களுக்கு, அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு விளக்கங்கள் தர பிகேஆர் கட்சி நடத்தவிருக்கும் பிரச்சார நகர்வலங்களில் மொகிதினும் இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(படம்: நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, மொகிதின் யாசின், வான் அசிசா, அஸ்மின் அலி ஆகியோர்)