Home Featured இந்தியா இந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி!

இந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி!

785
0
SHARE
Ad

rajnath singh-view-flood-assam

புதுடில்லி – இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்த இறுதி நிலவரங்கள்:

  • அசாம், மேகலாயா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்து இதுவரை 32 பேர் மரணமடைந்துள்ளனர்.
  • இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சனிக்கிழமை அசாம் மாநிலத்தில் வான்வழியாக சென்று வெள்ள நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார். அவருடன் அசாம் முதல்வர் சர்பானந்தா சொனோவால் இணைந்து கொண்டார் (மேலே: படம்)

rajnath sigh-briefed-floodராஜ்நாத் சிங் வெள்ள நிலவரம் குறித்த விளக்கங்களைப் பெறுகின்றார்…

  • “28 மாவட்டங்களைச் சேர்ந்த 30 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் எதிர்நோக்கும் பிரச்சனை மிகப் பெரியது” என ராஜ்நாத் சிங் வர்ணித்துள்ளார்.
  • மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக அசாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 27 பேர் மரணமடைந்துள்ளனர்.
#TamilSchoolmychoice

rajnath singh-flood relief-assam

வெள்ள நிவாரண மையத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் ராஜ்நாத் சிங்…

  • வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த திட்டங்கள் தேவை என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
  • அசாம் மாநிலத்தில் உள்ள வெள்ள நிவாரண மையம் ஒன்றுக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களையும் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

(படங்கள்: நன்றி – ராஜ்நாத் சிங் டுவிட்டர் பக்கம்)