Home Featured உலகம் ஒற்றுமையை வலியுறுத்தி இத்தாலி தேவாலயத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை!

ஒற்றுமையை வலியுறுத்தி இத்தாலி தேவாலயத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை!

564
0
SHARE
Ad

Italyபிரான்ஸ் – பிரான்சிலுள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த வாரம், பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையை வலியுறுத்தி இத்தாலியில் தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்கர்களுடன், முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இத்தாலியின் இஸ்லாமிய சமுதாயத்தினரின் தலைவர் இசெடின் எல்சிர், இந்த வரலாற்றுப் பூர்வ நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒற்றுமையை வலியுறுத்தும் படி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தாலி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ரோமிலுள்ள செயிண்ட் மரியா தேவாலயத்தில் நடந்த பூசையில், மூன்று இமாம்கள், தங்களது பாரம்பரிய உடையணிந்து முன் வரிசையில் அமர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டதாகத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice