Home Featured தமிழ் நாடு “என் பிள்ளை நிலவைப் பார்த்து 25 வருடங்களாகிறது” – பேரறிவாளனின் தாயார் உருக்கம்!

“என் பிள்ளை நிலவைப் பார்த்து 25 வருடங்களாகிறது” – பேரறிவாளனின் தாயார் உருக்கம்!

801
0
SHARE
Ad

சென்னை – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் தனது பிள்ளை நிலவைப் பார்த்தே 25 வருடங்களாகிவிட்டதாகக் கவிதை எழுதுவதாக மிகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலையாகி வெளியே வந்ததும், பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக் காட்ட விரும்புவதாகவும், அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க விரும்பவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நியூஸ் 7 வெளியிட்டுள்ள அந்தக் காணொளியை இங்கே காணலாம்:-