Home Featured நாடு ரவாங்கில் மீட்கப்பட்ட லம்போர்ஜினிக்குப் பின்னால் பல மர்மங்கள்!

ரவாங்கில் மீட்கப்பட்ட லம்போர்ஜினிக்குப் பின்னால் பல மர்மங்கள்!

493
0
SHARE
Ad

Policeசெர்டாங் – கடந்த ஜூன் 26 -ம் தேதி, பூசோங்கில் அதிகாலை 12.05 மணியளவில், 31 வயதான தொழிலதிபர் ஒருவரிடமிருந்து திருடப்பட்ட, மஞ்சள் நிற லம்போர்ஜினி காலார்டோ இரக ஆடம்பரக் காரை, ரவாங் சுங்கச் சாவடி அருகே காவல்துறையினர் மீட்டனர்.

இந்தத் திருட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் 52 வயதான ஒருவரையும், 47 வயதான ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் மெகாட் மொகமட் அமினுடின் மெகாட் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தக் கார் திருடப்பட்ட சம்பவம் குறித்து மெகாட் மொகமட் கூறுகையில், “லம்போர்ஜினி காரின் பின்னால், பிஎம்டபிள்யூ கார் ஒன்று மோதியுள்ளது.”

#TamilSchoolmychoice

“அதன் பின்னர் பிஎம்டபிள்யூ காரில் இருந்து இறங்கிய ஒருவர், சேதமடைந்த காருக்கு செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லை என்று அந்தத் தொழிலதிபரிடம் தெரிவித்துள்ளார்.”

“இந்நிலையில், இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, பிஎம்டபிள்யூ காரில் இருந்து இறங்கிய மற்றொருவர், தொழிலதிபரை ஆயுதத்தைக் காட்டி மிரட்டியுள்ளார்.”

“இதனால் அந்தத் தொழிலதிபர் அச்சத்தில் சாலையின் ஓரத்திற்கு ஓடியுள்ளார். அப்போது இருவரும் லம்போர்ஜினி காரை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.” என்று மெகாட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அந்த லம்போர்ஜினி காரின் உண்மையான உரிமையாளர் அந்தத் தொழிலதிபர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால், அந்தக் காரின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை சாலைப் போக்குவரத்து இலாகாவிடம் (ஜேபிஜே) காவல்துறை விசாரணை செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

படம் – நன்றி (The Star)