புதுடெல்லி – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அதனைப் பார்வையிட்டது.
பின்னர், வழக்கு விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.