Home Featured உலகம் காட்சிக்கு வரும் டிரம்ப் மனைவியின் கடந்த கால நிர்வாணம்!

காட்சிக்கு வரும் டிரம்ப் மனைவியின் கடந்த கால நிர்வாணம்!

641
0
SHARE
Ad

donald trump-meliana trumpவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிற்பவரையும், அவரது கடந்த காலத்தையும் அங்குலம் அங்குலமாக உரித்துப் பார்த்து விடுவார்கள் அமெரிக்காவின் அரசியல் விமர்சகர்களும், தகவல் ஊடகங்களும்!

அத்தகைய ஒரு சிக்கலில்தான் தற்போது மாட்டிக் கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப். இவர் டொனால்ட் டிரம்பின் மூன்றாவது மனைவியாவார்.

தனது இளமைக் காலத்தில் ஒரு புகழ்பெற்ற விளம்பர அழகியாகத் (மாடல்) திகழ்ந்த மெலானியா, அப்போது பல விளம்பர அழகு பவனிகளில் உலா வந்ததோடு, மிகவும் கவர்ச்சியாகவும் பல தடவைகள் புகைப்படங்களுக்கு தோற்றம் தந்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

சில தடவைகள் நிர்வாணமாகவும் புகைப்படங்களுக்குத் தோற்றம் தந்திருக்கும் மெலானியா, தற்போது அந்தப் படங்கள் இணையத் தளங்களில் வெளியிடப்படுவதால், கொதித்துப் போயிருக்கின்றார்.

டொனால்ட் டிரம்பும் தனது மனைவியின் கடந்த கால நிர்வாணக் காட்சிகள் உலா வருவதால், தனது அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பின்னடைவு ஏற்படலாம் என கொந்தளித்துக் கொண்டிருக்கிறாராம்.

Melania-Trump-magazine cover 2011

2011இல் பத்திரிக்கை ஒன்றுக்கு மெலானியா அளித்த கவர்ச்சித் தோற்றம்..

படுக்கையில் அரை நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் படுத்துக் கொண்டு மெலானியா காட்சி தரும் புகைப்படங்கள் இணையத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தப் படங்கள் 1995ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டவையாம்.

அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக தோற்றம் கொடுத்திருக்கின்றார் மெலானியா. அந்தப் புகைப்படங்கள் டிரம்பின் சொந்த தனி விமானத்தில் அப்போது எடுக்கப்பட்டன.

ஏற்கனவே, ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமாவின் கடந்த கால உரையைப் போன்றே பேசியதைத் தொடர்ந்து மெலானியா காப்பியடித்து விட்டார் என்ற சர்ச்சைகள் எழுந்து அதன் காரணமாக, அவரது உரை தயாரிக்கும் செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், மெலானியா கடந்த கால நிர்வாணம் காட்சிக்கு வருவதால், டொனால்ட் டிரம்ப் அதற்கேற்ப தனது அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் எவ்வாறு மாற்றங்கள் செய்வது என யோசித்து வருகிறாராம்.