சென்னை – அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தான் காரணம் என அதிமுக அமைச்சர் ஒருவர் தமிழக சட்டமன்றத்தில் கூறிய கருத்து அவையில் பலத்த சிரிப்பொலிகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது, குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ ராமு பேசுகையில், “தமிழக முதல்வர் – ஹிலாரி சந்திப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக உலகம் கவனித்தது. ஹிலாரி அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவைச் சந்தித்தது அதிபர் தேர்தலை நோக்கி அவரை திருப்பியது. ஹிலாரி அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கே முதல்வர் ஜெயலலிதா தான் காரணம். சந்திப்பின் போது, முதல்வரின் வார்த்தையில் உள்ள யதார்த்தத்தை ஏற்று, அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஹிலாரி” என்று ராமு தெரிவித்துள்ளார்.