Home Featured கலையுலகம் “இருமுகன்” – முன்னோட்டம்: இன்னொரு மலேசியப் பின்னணி!

“இருமுகன்” – முன்னோட்டம்: இன்னொரு மலேசியப் பின்னணி!

751
0
SHARE
Ad

irumugan-vikram-nayantharaசென்னை – கடைசியாக விக்ரம் நடித்து வெளியான ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் தோல்வி கண்டதைத் தொடர்ந்து, வழக்கம்போல் விக்ரம் மிகுந்த சிரமம் எடுத்து நடித்திருக்கும் படம் ‘இருமுகன்’.

இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு இரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இந்தப் படமும் மலேசியப் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கின்றது.

படத்தின் முன்னோட்டத்தின்படி, தம்பி இராமையா மலேசியப் போலீசாக வருகின்றார். பல காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளன. விக்ரமும் ஒரு காட்சியில் மலேசியப் போலீஸ் இதில் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறுவது போல் வசனம் வருகின்றது.

#TamilSchoolmychoice

அண்மையில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த கபாலி படைத்தைத் தொடர்ந்து வெளிவரும் இருமுகன் படமும் மலேசியக் காட்சிகளைக் கொண்டு வெளிவருகின்றது.

அரிமா நம்பி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் வெளிச்சத்திற்கு வந்த இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள படம் இது. நயன்தாரா, நித்யா மேனன் என இரு கதாநாயகிகள் வலம் வரும் படத்தில் விக்ரமும் இரு வேடங்களில் வருகின்றார்.

அதில் ஒரு வேடம் திருநங்கை வேடம் போல் காட்டப்பட்டிருக்கின்றது.

எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் காணொளி இணைப்பில் காணலாம்.