Home Featured நாடு ‘கெலிங்’ என்று மகாதீர் குறிப்பிடும் காணொளியால் பரபரப்பு!

‘கெலிங்’ என்று மகாதீர் குறிப்பிடும் காணொளியால் பரபரப்பு!

779
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – மலேசிய இந்தியர்களை ‘கெலிங் – Keling’ என்றழைக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் காணொளி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை முதல் வாட்சாப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

கெலிங் என்பது மலேசியாவில் இந்தியர்களை இழிவாகக் கூறும் ஒரு சொல்லாகக் கருதப்பட்டு வருகின்றது.

தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான மஇகா இன்று சனிக்கிழமை இரவு தனது 70-ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவிருக்கும் நிலையில், இந்தக் காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று இரவு நடைபெறவுள்ள மஇகா 70-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நஜிப் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.