செர்டாங் – நேற்று இரவு மஇகாவின் 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடத்தப்பட்ட மாபெரும் விருந்து நிகழ்ச்சியில், மஇகா கிளைத் தலைவர்கள், அழைக்கப்பட்ட பிரமுகர்கள், தேசிய முன்னணி கூட்டணி கட்சிகள், தோழமைக் கட்சிகள், முன்னாள் மஇகா தலைவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என ஏறத்தாழ 7,000 பேர் கலந்து கொண்டனர்.
செர்டாங்கிலுள்ள விவசாயக் கண்காட்சி மண்டபத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.
விருந்தில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப்புடன் சுப்ரா தம்பதிகள், எஸ்.கே.தேவமணி, சாமிவேலு தம்பதிகள்…
மஇகா வரலாற்றில் இத்தகைய பிரம்மாண்டமாக விருந்து நிகழ்ச்சி இதுவரை நடத்தப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு சிறப்பான முறையில், மிகப் பெரிய அளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப் துன் ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழாவின் உச்சகட்டமாக அமைந்தது மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களின் குடும்பத்தினர் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டதாகும்.
சிறப்பு செய்யப்பட்ட முன்னாள் மஇகா தலைவர்களின் குடும்பத்தினர், சாமிவேலு தம்பதியர், மசீச தலைவர் லியோ தியோங் லாய், ஆகியோர் புடைசூழ, கேக் வெட்டும் நஜிப், சுப்ரா….
மஇகாவின் ஏழாவது தேசியத் தலைவராக 32 ஆண்டுகள் பதவி வகித்த டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவுக்கும் பிரதமர் நஜிப் சிறப்பு செய்து கௌரவித்தார்.
விருந்து நிகழ்ச்சிகளின் இடையே கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மஇகா 70ஆம் ஆண்டு கொண்டாட்ட நினைவாக கேக் வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா…
(அடுத்து – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆகியோர் 70ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் வழங்கிய உரைகளின் முக்கிய அம்சங்கள்)