ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் இரண்டாம் நாளில், பதக்கங்களை வென்ற நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும், ஹங்கேரியும் முன்னணி வகிக்கின்றன. இரண்டும் தலா இரண்டு தங்கங்களைப் பெற்றுள்ளன.
பெண்களுக்கான 48 கிலோ பிரிவின் பளு தூக்கும் போட்டியில் தாய்லாந்தின் சொப்பித்தான் தானாசான் (படம்) தங்கம் வென்றுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தோனிசியாவின் ஸ்ரீ வாஹ்யுனி அகஸ்தியானி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
மூன்றாவது இடத்தைப் பிடித்து மியாகே, ஜப்பானுக்கு வெண்கலம் பெற்றுத் தந்தார். இதன் மூலம் இந்தப் பிரிவில் அனைத்துப் பதக்கங்களையும் ஆசியர்களே பெற்றுள்ளனர்.
மலேசிய நேரப்படி இன்று சனிக்கிழமை இரவு வரையிலான நாடுகளின் பதக்கப் பட்டியல்:
Comments