Home Featured கலையுலகம் திரைப்பட விழாவில் மொழி அடிப்படையில் மலேசியப் படங்களைப் பிரிப்பதா ? – மஇகா கண்டனம்!

திரைப்பட விழாவில் மொழி அடிப்படையில் மலேசியப் படங்களைப் பிரிப்பதா ? – மஇகா கண்டனம்!

945
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – திரைப்படத் தணிக்கை வாரியத்தின் இவ்வாண்டு திரைப்பட விழாவில்  சிறந்த படம் , சிறந்த திரைக்கதை,சிறந்த இயக்குநர் ஆகியவற்றுக்கான விருதுகள்  மொழி அடிப்படையில் வழங்கவிருப்பதை மஇகா கண்டிக்கிறது என ம.இ.கா தேசிய தலைவர்  டத்தோஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஒரு தேசியத் திரைப்பட வாரியம் மொழி அடிப்படையில் விருது வழங்குவதன் நோக்கம் தான் என்ன? மலேசிய ரசிகர்களால் பாராட்டப்பட்ட “ஓலா போலா” மற்றும் ‘ஜகாட்’ போன்ற திரைப்படங்கள்  தேசிய மொழி தேர்வில் முன்மொழியப்படாதது வருத்தத்தை அளிக்கிறது.”

#TamilSchoolmychoice

Jagat“அவை மற்ற மொழிகளுக்கான விருதில் முன்மொழியப்படும் என கூறப்படுகிறது. நாட்டின் ஒற்றுமைக்கு விளையாட்டு , இசை முக்கிய பங்காற்றுகிறது. இவற்றில் மலேசியர்கள் என்ற அடையாளம் தான் முக்கியம்.”

“ஆகவே இவ்வாண்டு திரைப்பட விழாவில் மொழி அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என  மஇகா  வலியுறுத்துகிறது.ஏனென்றால் இவை திரைப்படத் துறையில் ஈடுபடுவோருக்கு சுணக்கத்தையே  ஏற்படுத்தும் . கலைத்துறை ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதற்கு மற்ற துறைகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்பது எவரும் மறுக்க இயலாது.” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.