Home Featured நாடு “மொகிதின் புதிய கட்சி – முறையாக பரிசீலிக்கப்படும்” – சாஹிட் உறுதி!

“மொகிதின் புதிய கட்சி – முறையாக பரிசீலிக்கப்படும்” – சாஹிட் உறுதி!

802
0
SHARE
Ad

muhyiddin-bersatu-party submission

புத்ரா ஜெயா – முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் சமர்ப்பித்த புதிய கட்சிக்கான விண்ணப்பத்தை சங்கப் பதிவிலாகா முறையாகவும், சட்டப்படியும் பரிசீலிக்கும் என்றும், அந்த நடைமுறையில் தான் தலையிடப் போவதில்லை என்றும் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.

சங்கப் பதிவிலாகா விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும், தன்னிச்சையாகவும் முடிவெடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசின் நேற்று செவ்வாய்க்கிழமை, சுருக்கமாக ‘பெர்சாத்து’ (ஒற்றுமை) என அழைக்கப்படும் கட்சிக்கான விண்ணப்பத்தை சங்கப் பதிவிலாகாவில் சமர்ப்பித்தார் (மேலே படம்).

bersatu-party-symbol

பெர்சாத்து புதிய கட்சியின் அறிவிப்பு – தமிழில் “புதிய தொடக்கம் – மேலும் சிறந்த மலேசியாவை நோக்கி” என்ற பொருளில்…

சங்கப் பதிவிலாகா உள்துறை அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வருகிறது என்பதால், புதிய கட்சிக்கான விண்ணப்பம் மீது, சாஹிட்டின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும், அவரது தலையீடு இருக்குமா என்பது குறித்தும் அரசியல் பார்வையாளர்கள் தங்கள் பார்வையைப் பதித்துள்ளார்கள்.

இந்நிலையில் சாஹிட் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். புத்ரா ஜெயாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சாஹிட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.