Home Featured நாடு சாஹிட் மருமகன் மரணம் தொடர்பில் பல் மருத்துவர் மீது 9 குற்றச்சாட்டுகள்!

சாஹிட் மருமகன் மரணம் தொடர்பில் பல் மருத்துவர் மீது 9 குற்றச்சாட்டுகள்!

760
0
SHARE
Ad

justiceகோலாலம்பூர் – துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடியின் மருமகன் மரணமடைந்த விவகாரத்தில், அவருக்கு சிகிச்சை அளித்த பல் மருத்துவர் மீது தவறான சிகிச்சை அளித்து மரண விளைவித்ததாக, அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.

சிகிச்சையின் போது சாஹிட் மருமகனான சையட் அல்மான் சையட் ஆல்விக்கு மயக்க மருந்து வழங்கிய பல்மருத்துவர் டிங் அதில் நிபுணத்துவம் இல்லாதவர், மேலும் பல் எக்ஸ்ரே எடுத்த நோர் அஷிமா முகமட் நூவி என்பவர் அதற்குத் தகுதியில்லாதவர் என இப்படியாக டிங் மீதும் அவரது சிகிச்சை மையம் மீதும் 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை 36 வயதான டாக்டர் டிங் டெக் சின் என்பவர் மறுத்ததோடு, விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் 1-ம் தேதி, பங்சாரிலுள்ள ஜாலான் தெலாவி என்ற இடத்தில் உள்ள பல் சிகிச்சை மையத்தில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை, சாஹிட்டின் மருமகனான டத்தோ சையட் அல்மான் சையட் ஆல்விக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் மரணமடைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

சையட் அல்மானுக்கு பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, அவர் சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக, அவர் மலாயா மருத்துப் பல்கலைக்கழக மையத்தில் கொண்டு செல்லப்பட்ட போது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நேற்று அமர்வு நீதிமன்ற நீதிபதி சைனல் எல்.சாலே, இந்த வழக்கில் குறிப்பிட அக்டோபர் 17-ம் தேதிக்கு நிர்ணயம் செய்ததோடு, 20,000 ரிங்கிட் பிணைத்தொகை மற்றும் ஒருவரின் உத்திரவாதத்துடன், மருத்துவர் டிங்கை பிணையில் விட உத்தரவிட்டார்.

டிங் மீதா குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.