Home Featured உலகம் சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கம்: நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் சாதனை!

சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கம்: நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் சாதனை!

749
0
SHARE
Ad

Josephரியோ டி ஜெனிரோ – இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒலிம்பிக் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணியிலிலான (butterfly event) நீச்சல் போட்டியில், சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், தங்கம் வென்றுள்ளார்.

21 வயதான அவர், 50.30 வினாடிகளில் நீந்தி சென்று சுவற்றைத் தொட்டுள்ளார். கடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் பிரிவில் வென்று வந்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ், இம்முறை இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

கடந்த 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஃபெல்ப்சின் சாதனையான 50.58 வினாடியை இம்முறை ஜோசஃப் முறியடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு, தங்கம் வென்ற முதல் தென்கிழக்காசிய நீச்சல் வீரர் என்ற பெருமையையும் ஜோசஃப் பெற்றுள்ளார்.