Home 13வது பொதுத் தேர்தல் புத்ரா ஜெயாவில் பாஸ் வேட்பாளராக நிற்க தயார்- ஹூசாம் மூசா சவால்

புத்ரா ஜெயாவில் பாஸ் வேட்பாளராக நிற்க தயார்- ஹூசாம் மூசா சவால்

602
0
SHARE
Ad

Husam-Musa-2-Sliderஷா அலாம், மார்ச்19- புத்ரா ஜெயா நாடாளுமன்ற தொகுதியில் தாம் பாஸ் கட்சியின் வேட்பாளராக நிற்க தயாராக உள்ளதாக பாஸ் உதவித் தலைவரும் கிளந்தான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஹூசாம் மூசா தெரிவித்தார்.

“புத்ரா ஜெயாவானது தேசிய முன்னணியின் பலமான ஆதிக்கம் நிறைந்த தொகுதி. ஆதேவேளையில் புத்ராஜெயாவில் வேட்பாளராக நிற்கும் வேட்பாளரும் அம்னோவின் அதிகாரம் நிறைந்தவர். அந்த இடத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் அரசாங்க ஊழியர்களாக  இருப்பதனால் புத்ரா ஜெயாவில் போட்டியிடுவதானது சுலபமான காரியம் இல்லை” என்று அவர் கூறினார்.

“புத்ரா ஜெயா பாஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் என்னை வேட்பாளராக நிற்க வைக்க மூன்று முறை கேட்டு வந்தனர். அதே வேளையில், என்னுடைய வரவானது, பாஸ் கட்சியின் சவாலை வலுவாக்கி மக்களிடையே புத்ரா ஜெயாவின் ஆட்சியை மாற்றி அமைக்கும். இந்த சவாலானது மிகவும் கடினமாக தென்பட்டாலும் எனக்கு அங்கு போட்டியிடுவதில் எந்த ஒரு தடங்கலும் இல்லை”  என்றார் ஹூசாம்.

#TamilSchoolmychoice

“ஓர் அரசாங்க ஆட்சியை நிறுவுவதற்கு முன்னால் அந்த அரசாங்கத்தின் ஏதாவது ஒரு கோட்டையை நாம் பிடித்தாக வேண்டும் என்பதுதான் சரித்திரம் நமக்கு கூறும் பாடம். அந்த வகையில் தேசிய முன்னணியின் கோட்டையாகத் திகழும் புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் நாம் மத்திய ஆட்சியை அமைப்பதற்கும் வழிகோல முடியும்”என்றும் அவர் மேலும் கூறினார்.

இதனை தொடர்ந்து, புத்ரா ஜெயாவில் வேட்பாளராக நின்று அவ்வட்டார மக்களைக் கவர்வதற்கான வியூகங்களையும் திட்டங்களையும் தான் இன்னும் வகுக்கவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

தேசிய முன்னணி சார்பாக புத்ரா ஜெயா தொகுதியில் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளரும் அம்னோவின் தலைமைச் செயலாளருமான துங்கு அட்னான் மீண்டும் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.