Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ்: மழைத் தூறலுடன் கோலாகலமான நிறைவு விழா!

ஒலிம்பிக்ஸ்: மழைத் தூறலுடன் கோலாகலமான நிறைவு விழா!

681
0
SHARE
Ad

olympics-closing ceremony-

ரியோ டி ஜெனிரோ – (காலை 8.00 மணி நிலவரம்)  இன்று திங்கட்கிழமை மலேசிய நேரப்படி, காலை 7.00 மணிக்குத் (பிரேசில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு) தொடங்கிய ஒலிம்பிக்ஸ் நிறைவு விழா தற்போது கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வண்ணமயமான ஒளிவெள்ளம் பாய்ச்சும் நிகழ்ச்சிகளுடன், விளையாட்டாளர்கள் மீண்டும் அரங்கத்துக்குள் அணி வகுத்து வர, அரங்கம் முழுவதுமே பல்வேறு வண்ணங்களில் கண்கொள்ளாக் காட்சியாக ஒளிர்ந்தது.

#TamilSchoolmychoice

மழைத் தூறலும் சேர்ந்து கொண்டதால், அணி வகுத்து வந்த விளையாட்டாளர்கள் மழைக்கான பாதுகாப்பு ஆடைகளுடன் அரங்கில் வலம் வந்தனர்.