Home Featured உலகம் சிங்கை நிதியமைச்சராக ஹெங் சுவி கியாட் தொடர்வார்; 2-வது நிதியமைச்சராக லாரன்ஸ் வோங்!

சிங்கை நிதியமைச்சராக ஹெங் சுவி கியாட் தொடர்வார்; 2-வது நிதியமைச்சராக லாரன்ஸ் வோங்!

957
0
SHARE
Ad

heng swee keat-singapore finance minister

சிங்கப்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் நலக் குறைவால் தனது சுதந்திர தின உரையைப் பாதியிலேயே நிறுத்திப் பின்னர் தொடர்ந்த சிங்கைப் பிரதமர் லீ சியன் லூங், நிதியமைச்சர் ஹெங் சுவி கியாட் (படம்) தனது பணிகளை மீண்டும் தொடர்வார் என அறிவித்துள்ளார்.

அதே வேளையில் ஹெங்கிற்கு உதவிகரமாக இயங்குவதற்கு ஏதுவாக தேசிய மேம்பாட்டுக்கான அமைச்சர் லாரன்ஸ் வோங் இரண்டாவது நிதியமைச்சராகச் செயல்பட்டு வருவார் என்றும் லீ அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, இதுவரை இடைக்கால நிதியமைச்சராகச் செயல்பட்டு வந்த தருமன் சண்முகரத்தினம் இனி அப்பணிகளைத் தொடரமாட்டார் என்றும் லீ கூறியுள்ளார்.

நிதியமைச்சர் ஹெங் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கவனம் செலுத்துவார் என்றும் 2-வது நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் நிதி அமைச்சின் அன்றாடப் பணிகள் தொடர்பில் ஹெங்கிற்கு உதவியாகச் செயல்படுவார் என்றும் பிரதமர் லீ கூறியுள்ளார்.