Home Featured நாடு வியாழக்கிழமை வரை நாம் வீ தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்!

வியாழக்கிழமை வரை நாம் வீ தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்!

813
0
SHARE
Ad

Nameweeஜார்ஜ் டவுன் – நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ராப் கலைஞர் நாம் வீ இன்று திங்கட்கிழமை காலை 10.20 மணியளவில் பினாங்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இஸ்லாமை அவமதிப்பது போலான காணொளி ஒன்றை வெளியிட்டது தொடர்பாக, அவரை குற்றவியல் சட்டம், பிரிவு 295-ன் கீழ், 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி அகமட் தாஜுடின் ஜைன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரையில், அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (தி ஸ்டார்)