Home இந்தியா இலங்கை தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம்- சோனியா

இலங்கை தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம்- சோனியா

639
0
SHARE
Ad

soniaபுது டில்லி, மார்ச். 19- இலங்கை தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தின் எதிரொலியாக இன்று காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள சோனியா, கூட்டத்தினிடையே பேசுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக இந்தியா உறுதியான நிலைப்பாட்டுடன் எதிர்க்கும்.

இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஆதரிக்கும் என்றார்.

#TamilSchoolmychoice

இத்தாலி விவகாரம் குறித்துப் பேசிய சோனியா, எந்த நாடும், இந்தியாவை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ள விட முடியாது என்று கூறினார்.