Home Featured இந்தியா அவசர ஊர்தி வர மறுப்பு: மனைவியின் சடலத்தை தோளில் தூக்கிச் சென்ற கணவன்!

அவசர ஊர்தி வர மறுப்பு: மனைவியின் சடலத்தை தோளில் தூக்கிச் சென்ற கணவன்!

859
0
SHARE
Ad

odisaஒடிசா – இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில், அவசரஊர்தி வரமறுத்ததால், இறந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்தபடி நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டானா மாஜி என்பவர்.

காசநோயால் இறந்த தனது மனைவியை, சுடுகாடு வரை ஏற்றிச் செல்ல அப்பகுதியில் உள்ள மருத்துவமனையின் அவசர ஊர்தியை அழைத்துள்ளார்.

ஆனால் அவர்கள் வரமறுக்கவே, இறந்த தனது மனைவியின் சடலத்தை துணி ஒன்றில் சுற்றி, தனது தோளில் சுமந்தபடி நடந்து சென்றுள்ளார். அவருக்குத் துணையாக அவரது 12 வயது மகள் உடன் சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

“அந்த மருத்துவமனை அதிகாரிகள் வாகனம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நான் மிகவும் ஏழை, மனைவியின் சடலத்தை எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்ய வசதியில்லை என்று கெஞ்சினேன். ஆனால் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் எனக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர்” என்று டானா மாஜி கூறியதாக ஓடிவி என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.