Home Featured உலகம் கடத்தப்பட்ட 900,000 லிட்டர் டீசல் எண்ணெய் கப்பல் மீட்கப்பட்டது!

கடத்தப்பட்ட 900,000 லிட்டர் டீசல் எண்ணெய் கப்பல் மீட்கப்பட்டது!

533
0
SHARE
Ad

vier-harmoniஜகார்த்தா – ‘வர்த்தகத் தகராறு’ காரணமாக, கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி 900,000 லிட்டர் டீசலுடன் சொந்தப் பணியாளர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலான எம்டி ஹார்மோனியை, இந்தோனிசிய கடற்படை கண்டுபிடித்துவிட்டதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

போர்னியோ தீவில் உள்ள மேற்கு கலிமண்டான் என்ற பகுதியில் அக்கப்பல் கண்டறியப்பட்டதாக இந்தோனிசியக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேல் விசாரணைக்காக அக்கப்பல் தஞ்சோங் பினாங்கு வரை தக்க பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படையைச் சேர்ந்த எடி சுசிப்டோ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice