Home Featured நாடு மலாக்காவில் பயங்கரம்: அம்னோ உறுப்பினர், அவரது கணவர், மகன் படுகொலை!

மலாக்காவில் பயங்கரம்: அம்னோ உறுப்பினர், அவரது கணவர், மகன் படுகொலை!

663
0
SHARE
Ad

Malacca murderமலாக்கா – இன்று வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில், மலாக்காவிலுள்ள கம்போங் பெர்தாம் ஹிரில் என்ற இடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது மர்ம நபர் நடத்திய கொடூரத் தாக்குதலில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மரியா பாஹ்ரின் (வயது 62), அவரது கணவர் ஹசான் வாகாப் (வயது 70) மற்றும் அவர்களது மகன் தௌபிக் ஹசான் ஆகியோர் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மரியா பாஹ்ரின் பத்து மகளிர் அம்னோவின் நிரந்தரத் தலைவர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

அவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், கூர்மையான ஆயுதத்தால் அவர்களைத் தாக்கியுள்ளதாக மலாக்கா காவல்துறைத் தலைமை துணை ஆணையர் டத்தோ ரம்லி டின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்குடும்பத்திற்கு மிகவும் அறிந்த போதைப் பழக்கமுள்ள 27 வயது நபர் ஒருவரின் மீது சந்தேகமடைந்துள்ள காவல்துறை, அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றது.