Home Featured உலகம் “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” – எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தமிழ்ப் பாடல்!

“தஞ்சாவூரு மண்ணு எடுத்து” – எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தமிழ்ப் பாடல்!

1870
0
SHARE
Ad

Nathanசிங்கப்பூர் – மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலி இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இறுதி மரியாதையின் போது, நாதனுக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பாடலான, சேரனின் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த, ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ என்ற பாடல் ஒலியேற்றப்பட்டது.

வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் களிமண்ணும், தண்ணீரும் ஒன்றாக இணைந்து பானையாக உருவாகிறது என அப்பாடலில் சொல்லப்பட்டிருப்பது போல், பல்லின மக்கள் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கியது தான் சிங்கப்பூர் என எஸ்.ஆர்.நாதன் கருதி, இப்பாட்டை அதிகம் விரும்புவார் என மேடையில் விளக்கமளிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அக்காணொளியை கீழே உள்ள இணைப்பின் வழியாகக் காணலாம்:

https://www.facebook.com/TheStraitsTimes/videos/10153716298462115/

படம்: நன்றி (The Straits Times)