சிங்கப்பூர் – இன்று திங்கட்கிழமை நண்பகல் வரையில் உள்நாட்டிலேயே பரவிய மேலும் 15 புதிய ஜிக்கா தொற்று நோய் கண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கட்டுமானப் பகுதிகளில் இந்த புதிய நபர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை, சந்தேகத்துக்கு உள்ளாகி இருக்கும் சுமார் 6,000 பகுதிகளில் 3,600 பகுதிகள் தேசிய சுற்றுச் சூழல் மையத்தால் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் வளரக் கூடிய சூழல் கொண்ட பகுதிகளும் பரிசோதிக்கப்படுகின்றன.
மலேசியாவிலும் இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது.