சென்னை – தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கிராமப்புற தொழில்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தற்போது பால்வளத் துறை மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த பெஞ்சமின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
மாஃபா கே.பாண்டியராஜன் புதிய பள்ளிக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஇஅதிமுக சார்பாக பல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு தனது தரப்பு வாதங்களை ஆணித்தரமாகவும், அதே சமயம் விவேகமாகவும், அமைதியாகவும், வழங்கி வந்ததன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் பாண்டியராஜன்.
கடுமையான போட்டிக்கிடையில் சென்னைக்கு அருகிலுள்ள ஆவடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பாண்டியராஜன், அஇஅதிமுகவின் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமைச்சராக நியமிக்கப்படுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் காலங் கடந்து தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.