Home Featured இந்தியா மேற்கு வங்காள மாநிலம் இனி ‘பங்களா’ என்று அழைக்கப்படும்!

மேற்கு வங்காள மாநிலம் இனி ‘பங்களா’ என்று அழைக்கப்படும்!

956
0
SHARE
Ad

West_Bengal_locator_map.

கொல்கத்தா – இந்திய மாநிலங்களில் மாநில சார்பு கட்சிகள் ஆட்சியைப் பிடித்தவுடன் அம்மாநில மொழி, கலாச்சார உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் மாநிலத்தின் பெயர்களையும், முக்கிய நகர்களின் பெயர்களையும் மாற்றுகின்ற வழக்கத்தின் அடிப்படையில் மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரும் மாற்றம் காண்கின்றது.

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பங்களா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்றும் மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்ட மன்றத்தில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

தீர்மானம் சட்ட மன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பேசிய முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, ‘பங்களா’ என்ற பெயர் வரலாற்று பின்னணி கொண்டது’ என்று கூறினார்.

இனி அடுத்த கட்டமாக இந்தப் பெயர் மாற்றத்தை அங்கீகரிக்க நாடாளுமன்ற ஒப்புதலுக்கு தீர்மானம் அனுப்பப்படும்.