Home Featured நாடு ஹூசாம் மூசா மற்றொரு கட்சியில் சேருகிறார்!

ஹூசாம் மூசா மற்றொரு கட்சியில் சேருகிறார்!

870
0
SHARE
Ad

husam-musa5-nov3_400_267_100

கோலாலம்பூர் – பாஸ் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹூசாம் மூசா மற்றொரு அரசியல் கட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இணைகிறார். இன்று சைபர்ஜெயாவில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில்,  தான் இணையவிருக்கும் புதிய கட்சியின் பெயரை அவர் அறிவிப்பார்.

கிளாந்தான் மாநிலத்தின் வளர்ந்து வரும் முக்கியத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்ட ஹூசாம், சாலோர் (கிளந்தான்) சட்டமன்ற உறுப்பினராவார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக விடுத்த அறிக்கைகள் காரணமாக அவர் கடந்த மே மாதம் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவரது முன்னாள் அரசியல் நண்பர்கள் பலர் இணைந்துள்ள பார்ட்டி அமானா நெகாரா கட்சியில் அவரும்  ஐக்கியமாவார் என ஆரூடங்கள் கூறப்படுகின்றது.