Home Featured நாடு புத்ரா மையம் அருகே ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு!

புத்ரா மையம் அருகே ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு!

756
0
SHARE
Ad

PTWC3கோலாலம்பூர் – கோலாலம்பூர் – இன்று செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையில், மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் (International Conference of Asian Political Parties – ICAPP) இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கலந்து கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PWTC1இந்நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலேசியாவிலுள்ள பல்வேறு இந்திய அரசு சாரா இயக்கங்கள் புத்ரா அனைத்துலக வர்த்தக மையம் அருகே மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களோடு, மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜாவும் காணப்பட்டார்.

#TamilSchoolmychoice

PWTC2ராஜ பக்சேவின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்திய அவர்கள், ராஜபக்சே இந்த நாட்டிற்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.