Home Featured உலகம் ஏழை எளிய மக்களின் விடிவெள்ளி – புனிதர் அன்னை தெரசா!

ஏழை எளிய மக்களின் விடிவெள்ளி – புனிதர் அன்னை தெரசா!

1038
0
SHARE
Ad

Mother Teresaவாடிகன் – ஏழை, எளிய ஆதரவற்ற மக்களின் நலனுக்காகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்விற்காகவும், தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தொண்டாற்றிய அன்னை தெரசாவை, புனிதராக அறிவித்தார் போப் பிரான்சிஸ்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாடிகன் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Mother Teresa1கடந்த 1910-ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா, இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில் அறப்பணிகள் செய்தார்.

#TamilSchoolmychoice

தனது உன்னதமான தொண்டால், மக்களின் மனதில் இடம்பெற்று, அன்னையாய் போற்றப்பட்ட அவருக்கு, கடந்த 1951-ம் ஆண்டு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

Mother Teresa2அவருக்கு 1979-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1980-ம் ஆண்டு இந்திய அரசு  நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பு செய்தது.

அன்னை தெரசா, தனது 87-வது வயதில் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் கொல்கத்தாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.