Home Featured இந்தியா 11 மாதக் குழந்தையைப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரன் – டெல்லியில் சம்பவம்!

11 மாதக் குழந்தையைப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரன் – டெல்லியில் சம்பவம்!

653
0
SHARE
Ad

37EE29B300000578-3774322-image-a-31_1473075488941புதுடெல்லி – இந்தியாவின் தலைநகர் டெல்லியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 11 மாதங்களே ஆன பெண் குழந்தையை, அதன் தாயிடமிருந்து தூக்கிச் சென்ற ஒருவன், காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விகாஸ்புரி என்ற பகுதியில், இரவு 10 மணியளவில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த அக்குழந்தையை, அந்நபர் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

11 மணியளவில் குழந்தை அருகில் இல்லாததை உணர்ந்த தாய், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உடனடியாகத் தேடுதல் பணியில் இறங்கிய காவல்துறை, அருகில் இருந்த காட்டுப் பகுதியில், சுயநினைவின்றிக் கிடந்த அக்குழந்தையை மீட்டு, தீன் தயாள் உபத்யாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

“அப்பெண் குழந்தைக்கு இரத்தப் போக்கு நிற்காமல் இருந்தது. அவள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனிடையே, குழந்தையின் அருகில் கிடந்த செல்பேசி ஒன்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதனை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.

அப்பகுதியில் அருகில் இருந்த தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் வைத்து அக்குற்றவாளியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தான் அக்குழந்தையை இரண்டு மணிநேரங்கள் பாலியல் வன்புணர்வு செய்ததை அவன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் காவல்துறைத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 376 மற்றும் போஸ்கோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் அந்நபர் மீது பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, அவனை திகார் சிறையில் அடைத்துள்ளனர்.