Home Featured உலகம் மகன் உடன் இருப்பதையும் மறந்து போதையின் உச்சம் சென்ற தம்பதி!

மகன் உடன் இருப்பதையும் மறந்து போதையின் உச்சம் சென்ற தம்பதி!

594
0
SHARE
Ad

ஓகியோ – அமெரிக்காவின் ஓகியோ நகரில், அளவுக்கதிகமான ஹெராயின் எடுத்துக் கொண்ட தம்பதி, காரின் பின்னால் மகன் இருப்பது கூடத் தெரியாமல் போதையில் சுயநினைவின்றி இருக்கும் புகைப்படம் ஒன்றை ஓகியோ காவல்துறை நேற்று தனது பேஸ்புக்கில் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளது.

ohiyo“இப்புகைப்படங்கள் சிலரை எரிச்சலூட்டும் என்பதை நன்கு அறிவோம். அதற்காக உண்மையில் வருந்துகிறோம். ஆனால் போதைப் பழக்கமில்லாத பொதுமக்கள், தினசரி நாங்கள் எப்படிப்பட்ட விசயங்களைக் கையாளுகின்றோம் என்பதைக் காட்ட இது தான் நேரம்” என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.

இருவரும் கிட்டத்தட்ட கோமா நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவர்களை மீட்டுள்ள காவல்துறை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தனது தாய் தந்தையரின் நிலையறியாத அந்த அப்பாவிச் சிறுவன், காரின் பின்னிருக்கையில், அமைதியாக அமர்ந்திருப்பது பலரையும் வருந்தச் செய்துள்ளது.