Home Featured உலகம் பாலி அருகே படகு வெடித்து 2 பேர் பலி, 13 பேர் காயம்!

பாலி அருகே படகு வெடித்து 2 பேர் பலி, 13 பேர் காயம்!

1444
0
SHARE
Ad

baliஜகார்த்தா – இந்தோனிசியாவின் பாலி தீவு மற்றும் லோம்பாக்கிற்கு இடையில், இன்று வியாழக்கிழமை படகு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில், இருவர் பலியாகினர். 13 பேர் காயமுற்றனர்.

35 வெளிநாட்டவரைக் கொண்டிருந்த அப்படகில், 4 பணியாளர்கள் இருந்துள்ளனர். கிழக்கு பாலியின் பாடாங் பாய் துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்ட அப்படகு சற்று நேரத்தில் வெடித்துள்ளது.

இது குறித்து பாலி காவல்துறைப் பேச்சாளர் மேட் சுடானா கூறுகையில், லோம்பாக் கடற்பகுதிக்கு அருகே இந்த வெடிவிபத்து நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்த வெடிவிபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. பாலி காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றது.