Home Featured நாடு பால்கனியிலிருந்து வளர்ப்பு நாய் வீசியெறிப்பட்டதாக நேரில் பார்த்த பெண் புகார்!

பால்கனியிலிருந்து வளர்ப்பு நாய் வீசியெறிப்பட்டதாக நேரில் பார்த்த பெண் புகார்!

646
0
SHARE
Ad

dog-nina-balconyகோலாலம்பூர் – அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து வளர்ப்பு நாய் ஒன்று அதன் உரிமையாளரால் தூக்கி வீசப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த நினா ஜைனால் என்பவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள இச்சம்பவம் தற்போது நட்பு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நினா வெளியிட்டுள்ள குறிப்பில், “இரக்கமின்றி பால்கனியில் இருந்து இந்த நாயை நீங்கள் வீசியெறிந்துள்ளீர்கள் என்பதை அறிவேன். என்ன காரணத்திற்காக அதைச் செய்தீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால், எந்த ஒரு உயிரினத்திடமும் இது போல் கொடூரமாக நடந்து கொள்ள காரணமே கிடையாது. நாங்கள் உங்களைப் பற்றி காவல்துறையிடமும், மிருகவதைத் தடுப்புப் பிரிவினரிடமும் (SPCA) புகார் அளித்துள்ளேன்” என்று நினா தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் வசிப்பவர் மீது குற்றம் சாட்டுகின்றார்.

#TamilSchoolmychoice

மேலும், அவர் கூறுகையில், தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது கேட்ட சத்தத்தைத் தொடர்ந்து அங்கு ஒரு நாயைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.

“நான் என்ன விழுந்தது என்று ஜன்னல் வழியே பார்த்த போது, எனக்கு மேலேயுள்ள வீட்டில் வசிப்பவர் தனது நாயைத் தூக்கி வீசியெறிந்தார்” என்று நினா தெரிவித்துள்ளார்.

அதை மேல் வீட்டில் வசிப்பவர் தான் செய்திருக்கிறார் என்று தனக்குத் தெரியும் என்றும், அவர்கள் உடனடியாக தனது வீட்டு ஜன்னலை அடைத்ததோடு, வேகமாக நடக்கும் சத்தமும் கேட்டதாகவும் நினா குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து உடனடியாகத் தான் அடுக்குமாடிக் குடியிருப்பின் பாதுகாவலரிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.