Home Featured நாடு 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெயர் மாற்றம் – தேர்தல் ஆணையம் முடிவு!

12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெயர் மாற்றம் – தேர்தல் ஆணையம் முடிவு!

672
0
SHARE
Ad
SPR 1

கோலாலம்பூர் – நாடெங்கிலும் 12 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 34 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பெயர் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ‘தி நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ இணையதளத்தில் இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.இந்த நடவடிக்கையின் படி, சம்பந்தப்பட்ட தொகுதிகளின் பெயர்களில் தான் மாற்றம் ஏற்படுமே தவிர, அதன் எண்களில் மாற்றம் ஏற்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், சிலாங்கூரில் 5 தொகுதிகளிலும், பேராக்கில் 3 தொகுதிகளிலும், கெடா, கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதியிலும் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.

 

 

#TamilSchoolmychoice