Home Featured தமிழ் நாடு சீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மரணம்!

சீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மரணம்!

867
0
SHARE
Ad

 

vignesh-nam-tamilar-seeman-burnt-deathசென்னை – இன்று சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் நடத்திய காவிரி நதி நீர் பிரச்சனை குறித்த பேரணியில் கலந்து கொண்டு தீக்குளித்த விக்னேஷ் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்துள்ளார் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

காவிரி நீர் பாயும் டெல்டா பகுதியான திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.