Home Featured தமிழ் நாடு பதிலடி கொடுக்கும் தமிழகம் – முழு கடை அடைப்பு, இரயில் மறியல், பேரணி! ஸ்டாலின் கைது!

பதிலடி கொடுக்கும் தமிழகம் – முழு கடை அடைப்பு, இரயில் மறியல், பேரணி! ஸ்டாலின் கைது!

890
0
SHARE
Ad

 

tamil-nadu-banth-shops-closed

சென்னை – காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைப்பு நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

ஆங்காங்கே பேரணிகளும் நடைபெறுகின்றன.

இரயில் மறியலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையின்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், இதுவரை அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்ததாகத் தகவல்கள் இல்லை.

சென்னை எழும்பூரில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக திமுகவினர் அணிவகுத்துச் சென்றனர். இரயில் மறியலில் ஈடுபட ஸ்டாலின் தலைமையிலான பேரணியினர் முற்பட்டபோது ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.